மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, ராகு, சந்திரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் – பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் நோக்கங்கள் நிறைவேறும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலைமாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழு மூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள்.
பெண்களுக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும். அரசியல்வாதிகள் கட்சித்தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உங்கள் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல பல வழிகள் உதயமாகும். நிதி நெருக்கடிகள் ஏற்படாது. தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.
திருவோணம்: இந்த வாரம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உற்சாகத்துடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். சுகங்களும், சந்தோஷங்களும் பெருகும். நிலம், வீடு போன்றவற்றில் உள்ள பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தந்தையின் ஆதரவும் உண்டு.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் காலகட்டமிது. சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும்.
பரிகாரம்: வாராகி தேவியை வணங்க உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சனி, ராகு, சந்திரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் – சுக ஸ்தானத்தில் சூரியன், புதன் – பஞ்சம ஸ்தானத்தில் குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சொத்துக்கள் சம்பந்தமாக சற்று கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும்.
தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு சம்பளப்பாக்கி கைக்கு வரும். மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் சில நேரங்களில் உங்கள் வார்த்தைகளால் பிரச்சினை வரலாம். எனவே பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாருக்காவது ஏதேனும் வாக்குறுதிகள் கொடுத்திருந்தால் அவைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள். திருமணம் நல்ல வரனாக அமையும்.
சதயம்: இந்த வாரம் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும்.
பரிகாரம்: பைரவரை வணங்க கடன் பிரச்சினை தீரும்.
மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை – ராசியில் சுக்கிரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன் – சுக ஸ்தானத்தில் குரு – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு, சந்திரன் என கிரகநிலை உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் தடங்கல்கள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்வீர்கள். வீடு வாங்குவதில் இருந்த சிரமம் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள்.
பெண்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கலைத்துறையினருக்கு மனதில் இருந்த குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம். எனினும் முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும்.
உத்திரட்டாதி: இந்த வாரம் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
ரேவதி: இந்த வாரம் தந்தையாருடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வருங்கால சேமிப்புகளுக்கு சம்பாதிக்க சரியான நேரமிது. சின்னச்சின்ன சுபச்செலவுகள் வரலாம். சுபவிரையங்கள் ஏற்படும் காலமிது. மிக நீண்ட நாட்களாக வராமல் இருந்த நல்லசெய்தி வந்து சேரும்.
பரிகாரம்: நவக்கிரக குருவை வணங்கி வருவது நன்மை தரும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |