பாலிவுட் சினிமாவின் நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியர் தங்கள் மகள் துவாவின் புகைப்படத்தை முதல் முறையாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். துவாவின் படம் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இருவரும் தங்கள் மகளின் பெயரை அதிகாரபூர்வமாக துவா படுகோன் சிங் அறிவித்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாட்ட படங்களை ரன்வீர் – தீபிகா தம்பதியர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர்களின் மகள் துவாவும் இடம்பெற்றுள்ளார். துவாவின் படத்தை சமூக வலைதளத்தில் பார்த்து பலரும் அசப்பில் அம்மா தீபிகாவை போல இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2013-ம் ஆண்டு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘கோலியோன் கி ராஸ்லீலா ராம் லீலா’ பாலிவுட் படத்தின்போது, ரன்வீர் சிங் – தீபிகா இடையே காதல் மலர்ந்தது. இருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.