மனதிலேயே நிற்கும் படம் ‘இட்லி கடை’ என்று செல்வராகவன் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இப்படத்துக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. தற்போது இப்படத்தை பார்த்துவிட்டு செல்வராகவனும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
‘இட்லி கடை’ குறித்து இயக்குநர் செல்வராகவன், “இட்லி கடை ! நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம். கருப்பு சாமியும் கன்று குட்டியும் கண்களை கலங்க வைக்கின்றனர். நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என இப்பொழுதுதான் புரிகின்றது ! வாழ்த்துக்கள் தனுஷ் தம்பி” என்று தெரிவித்துள்ளார்.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்து வெளியான படம் ‘இட்லி கடை’. சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, இளவரசு உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்திருந்தனர். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்திருந்தார். இதன் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது
இட்லி கடை ! நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம். கருப்பு சாமியும் கன்று குட்டியும் கண்களை கலங்க வைக்கின்றனர்.
நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என இப்பொழுதுதான் புரிகின்றது !
வாழ்த்துக்கள் @dhanushkraja தம்பி !! pic.twitter.com/csabCRQ6dI
— selvaraghavan (@selvaraghavan) October 11, 2025