'மனதை திருடிவிட்டாய்' இயக்குநர் நாராயணமூர்த்தி மறைவிற்கு நடிகை காயத்ரி ஜெயராம் இரங்கல் | Actress Gayathri Jayaram mourns the passing of director Narayanamoorthy

‘மனதை திருடிவிட்டாய்’ இயக்குநர் நாராயணமூர்த்தி மறைவிற்கு நடிகை காயத்ரி ஜெயராம் இரங்கல் | Actress Gayathri Jayaram mourns the passing of director Narayanamoorthy


“மனதை திருடிவிட்டாய்’ இயக்குநர் நாராயணமூர்த்தி மறைவிற்கு நடிகை காயத்ரி ஜெயராம் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

2001 ஆம் ஆண்டு பிரபுதேவா, வடிவேலு, காயத்ரி ஜெயராம், கெளசல்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மனதை திருடி விட்டாய்’.

இந்தப் படத்தில் பிரபுதேவா – வடிவேலு கூட்டணியில் அமைந்த காமெடிகள் அனைத்தும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த ஹிட் படத்தை நாராயணமூர்த்திதான் இயக்கி இருந்தார்.

'மனதை திருடிவிட்டாய்'

‘மனதை திருடிவிட்டாய்’

தவிர, சன் தொலைக்காட்சியில் வெளிவந்த ‘நந்தினி’, ‘ராசாத்தி’, ‘ஜிமிக்கி கம்மல்’, ‘அன்பே வா’, ‘மருமகளே வா’ போன்ற தொடர்களை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாராயணமூர்த்தி மாரடைப்பால் நேற்று (செப். 23) உயிரிழந்திருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *