பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்கள் மகள் துவாவுடன் இந்த தீபாவளியைக் கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகர்ந்துள்ளனர்.
செப்டம்பர் 2024-ல் துவா பிறந்தார். தீபிகா படுகோன் அவ்வப்போது துவா மடியில் இருப்பதைப்போல தொடர்ந்து பல புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார். ஆனால் துவாவின் முகத்தை சமூக வலைதளங்களில் காட்டவில்லை.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு விமானநிலையத்தில் தீபிகா மற்றும் துவா இருக்கும் வீடியோவில் வைரலானது; அப்போது தீபிகா, தன் மகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என ரசிகரிடம் கேட்டிருந்தார்.
இந்நிலையில் இதுவரை துவாவின் முகத்தை வெளியிடாமல் வைத்திருந்த தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், இப்போது முதன்முறை தீபாவளிக்கு தங்கள் மகளின் முகத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதை பாலிவுட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.