அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார், ரோகினி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது “டுயூட்’.
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே, டிராகன் பட வெற்றியை தொடர்ந்து டியூட் படமும் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனையில் ஹாட்ரிக் அடித்திருக்கிறது.
இந்த ஹாட்ரிக் வெற்றி குறித்துப் பேசியிருக்கும் பிரதீப் ரங்கநாதன், “முதல் மூன்று படத்துக்கு ஹாட்ரிக் 100 கோடி வசூல் வெற்றி. இதுக்கு என்ன வாழ்த்தின எல்லாருக்கு ரொம்ப நன்றி. இந்த வெற்றிக்கு காரணம் நான் இல்லைங்க, நீங்கதான்.
நீங்க எனக்குக் கொடுத்த ஆதரவு, அன்புக்கு என்ன உங்க வீட்ல ஒருத்தனாக பார்த்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி. தமிழ் மக்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள். தெலுங்கு, கேரளா என எல்லா மொழி ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்.” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

