மேஷம்: தடைகள் உடைபடும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோக ரீதியாக பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரி பாராட்டுவார்.
ரிஷபம்: எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
மிதுனம்: பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களால் செலவு இருக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும். பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்.
கடகம்: தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தருவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த சொத்து பிரச்சினை, வழக்குகள் முடிவுக்கு வரும். வியாபாரம் லாபம் தரும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்.
சிம்மம்: பணவரவு உண்டு. தம்பதிக்குள் நெருக்கம் கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலக ரீதியான பயணம் ஆதாயம் தரும்.
கன்னி: அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் போட்டி இருக்கும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.
துலாம்: பிள்ளைகளுக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான முயற்சியில் இறங்குவீர். பிரபலமானவர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். விவாதங்களை தவிர்த்துவிடவும்.
விருச்சிகம்: நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். வியாபாரத்தில் லாபத்தை பெருக்க வழி கிடைக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
தனுசு: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் நீங்கி கனிவான பேச்சுவார்த்தைகள் இருக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
மகரம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். குழப்பம் நீங்கி இல்லத்தில் சந்தோஷம் நிலைக்கும். முன்கோபம் குறையும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்புயரும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
கும்பம்: மனஇறுக்கம், குழப்பங்கள் வரக்கூடும். யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடுகூடும். பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப் படுவீர். தலைமையிடத்தின் ஆதரவைப் பெற்று முன்னேறுவீர்.
மீனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பிரபலங்கள் அறிமுகமாவர். சொன்ன சொல்லை காப்பாற்ற போராடுவீர். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூறாதீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்கவும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல
|