மேஷம்: யாரையும் விமர்சித்துப் பேசாதீர். பிள்ளைகளால் செலவு வரும். சொத்து வழக்கு இழுபறியாகும். அண்டை வீட்டாருடன் அளவாக பழகுவது நல்லது. வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர். அலுவலகரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும்.
ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பணிகளை முடிப்பீர். மனதில் தெளிவு பிறக்கும். உடல்நலம் சீராகும். சேமிப்பு கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம்.
மிதுனம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வியாபாரம் லாபம் தரும். புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
கடகம்: சவால்கள், ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர்கள். தம்பதிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
சிம்மம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாள்வீர்கள்.
கன்னி: பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். பணவரவு உண்டு. அக்கம்பக்கத்தினரின் தொல்லை நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். மேலதிகாரிகள் ஆதரிப்பர். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும் சூழல் ஏற்படும்.
துலாம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். சகோதர – சகோதரிகளின் ஆதரவு உண்டு. அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் விவாதம் தவிர்க்கவும்.
விருச்சிகம்: திட்டமிட்ட பணியை போராடி முடிப்பீர். தம்பதிக்குள் ஈகோ பிரச்சினை ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும்.
தனுசு: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வீட்டில் பழுதான எலக்ட்ரானிக் பொருட்களை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும்.
மகரம்: வீட்டுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. தம்பதிக்குள் நெருக்கம் கூடும். மனக்குழப்பம் நீங்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
கும்பம்: தடைபட்டுக் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பணவரவு உண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்.
மீனம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.
|
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல
|

