1364390 Thedalweb மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 5 - 11  | Vara Rasi Palan for Mesham, Rishabam, Mithunam up to June 5-11

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 5 – 11  | Vara Rasi Palan for Mesham, Rishabam, Mithunam up to June 5-11


மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் சுக்கிரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு – சுக ஸ்தானத்தில் செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: வைகாசி 25 (ஜூன் 8) அன்று சுக ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் நீங்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது துரிதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். வேலையை மனதிற்கு பிடித்து செய்வீர்கள்.

குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் மறையும். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். பெண்கள் எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் அகலும். சுபச்செலவு கூடும். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.

அஸ்வினி: இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பரணி: இந்த வாரம் தொழில் வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பணத்தேவை உண்டாகும்.

பரிகாரம்: முருக பெருமானை வணங்க எல்லா வற்றிலும் நன்மை உண்டாகும்.

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சூரியன், புதன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் – சுக ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு – விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: வைகாசி 25 (ஜூன் 8) அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். ராசியில் இருக்கும் சூரியனால் திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழி வர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள்.

கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

கார்த்திகை 2, 3,4 பாதங்கள்: இந்த வாரம் பொருள்வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.

ரோகிணி: இந்த வாரம் தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம்.

மிருகசீரிஷம் 1,2 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.

பரிகாரம்: குரு பகவானை வணங்க செல்வம் சேரும்.

மிதுனம்: (மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் குரு – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு – லாப ஸ்தானத்தில் சுக்கிரன் – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: வைகாசி 25 (ஜூன் 8) அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் புதன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். குருவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். தனவாக்கு அதிபதி சந்திரன் சஞ்சாரத்தால் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். மனதில் இருந்த கவலை அகலும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபச்செலவு ஏற்படும்.

கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.

பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம்.

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரம் மூலம் பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

திருவாதிரை: இந்த வாரம் எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். லாபஸ்தான குரு சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும்.

பரிகாரம்: விநாயக பெருமானை ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின்நிலை:

17491198043065 Thedalweb மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 5 - 11  | Vara Rasi Palan for Mesham, Rishabam, Mithunam up to June 5-11




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1364390' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *