மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – சுக ஸ்தானத்தில் குரு – பஞ்சம ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் – சப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் – லாப ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல் திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
அஸ்வினி: இந்த மாதம் கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பண வசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.
பரணி: இந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பண வரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி சுமை குறைந்து காணப்படுவார்கள்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் வேலையில் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.
பரிகாரம்: ஸ்ரீ சரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு – சுக ஸ்தானத்தில் கேது – பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் – தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பண வரத்து கூடும். எதிர் பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். பெண்கள் திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் மந்தமாக காணப்படும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பண வரத்து திருப்தி தரும். மன குழப்பம் நீங்கும்.
ரோகிணி: இந்த வாரம் காரியங்களை சாதிப்பீர்கள். மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலை குறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். கடந்த காலங்களில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீ பைரவரை தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.
மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குரு – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – சுக ஸ்தானத்தில் சுக்கிரன் – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன் கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பண வரத்து அதிகரிக்கும். மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாராத உதவியால் நன்மை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். கணவர், மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாக்ரள்.
கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். மாணவர்கள் பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்ல முடிவுக்கு வரும்.
திருவாதிரை: இந்த வாரம் தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடு பட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன் தரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.
பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வது மன குழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
இந்த வார கிரகங்களின் நிலை:
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |