இசை நிகழ்ச்சி நடத்தும் கலாசாரங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இசைக் கலைஞர்கள் வெறும் பாடல் பாடுவதோடு நிறுத்தி விடாமல், மேடைகளில் அதனை ஒரு கலை நிகழ்ச்சியாக அரங்கேற்றுகின்றனர்.
அந்த வரிசையில் யுவன் சங்கர் ராஜா தனது தி யு1நிவர்ஸ் என்ற இசைச் சுற்றுப்பயணத்தை சென்னையிலிருந்து உலக அரங்குகள் வரை தொடங்க இருக்கிறார்.
அதன்படி டிசம்பர் 13ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் அவரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து அவர் பாரீஸ், மலேசியாவின் ஜோகூர் பாரு (Johor Bahru), துபாய் என பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.
முதலில் டிக்கெட்டை முன் பதிவு செய்யும் ஆயிரம் பேருக்கு யுவன் கையொப்பமிட்ட டி-ஷர்ட் வழங்கப்படும். மேலும் 10 அதிர்ஷ்டசாலி ரசிகர்கள் இசையமைப்பாளருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.