ரசவாதி படத்தின் ஒலிப் பொறியாளர் தபாஸ் நாயக், 9 உலக திரைப்படங்களைத் தாண்டி சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதைப் பெறுகிறார். மேலும் 5 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது ரசவாதி திரைப்படம்.
ரசவாதி
அர்ஜுன் தாஸ் உடன் தான்யா ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா மற்றும் ரிஷிகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார், இயக்குநர் சாந்த குமார் – தமன் கூட்டணியின் 3-வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ரசவாதி திரைப்படத்துக்கு சரவணன் இளவரசு, சிவக்குமார் என இரண்டு ஒளிப்பதிவாளர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர். வி ஜே சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் கிடைக்கிறது.