அடுத்த ஆண்டு தொடக்கம் வரை ரஜினிகாந்த் கால்சீட் இல்லாமல் இருக்கிறது. கூலி, ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு மேலும் ஒரு படத்தில் நடிக்கவும் ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அடுத்த ஆண்டு கூட ரஜினிகாந்த் கால்சீட் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசனை தாண்டி வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்று அட்லீயும், சன் பிக்ஸர்ஸ் நிறுவனமும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இரண்டாவது ஹீரோ… டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் மூலம் அதிக வருவாய் கொடுக்கக்கூடிய நடிகராக இருக்கவேண்டும் என்று இருவரும் விரும்புகின்றனர்.
ஹாலிவுட் நடிகர் யாரையாவது நடிக்க வைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்தனர். ஆனால் அது பட்ஜெட்டை அதிகமாக்கிவிடும் என்று கருதி அத்திட்டத்தை கைவிட்டுவிட்டு விட்டனர். இரண்டாவது ஹீரோ பிரச்னையால் தற்காலிகமாக சல்மான் கான் படத்தை இயக்குவதை அட்லீ ஒத்தி வைத்திருக்கிறார். சல்மான் கான் தற்போது நடித்து வரும் சிக்கந்தர் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். படம் மார்ச் 28ம் தேதி ரம்ஜானை முன்னிட்டு வெளியாகிறது.