‘டான் 3’ படத்தில் ரன்வீர் சிங்கிற்கு வில்லனாக நடிக்க அர்ஜுன் தாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஃபர்ஹான் அக்தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ள படம் ‘டான் 3’. முதல் இரண்டு ‘டான்’ படங்களுமே பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு, மாபெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த இரண்டு படங்களிலும் ஷாரூக்கான் நாயகனாக நடித்திருந்தார். தற்போது 3-வது பாகத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஜனவரியில் இருந்து படப்பிடிப்பை தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இதில் நாயகியாக கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளார். முழுக்க ஹாலிவுட் சண்டைக் கலைஞர்களை வைத்து பிரம்மாண்டமாக வடிவமைக்க உள்ளார்கள். இதில் ரன்வீர் சிங்கிற்கு வில்லனாக நடிக்க அர்ஜுன் தாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.
இது தொடர்பான இறுதிகட்டப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது. இப்படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமாகவுள்ளார் அர்ஜுன் தாஸ். ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘குட் பேட் அக்லி’ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஓஜி’ படத்திலும் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.