ராம் அப்துல்லா ஆண்டனி: 'கத்தி, ரத்தம், சத்தம் என்ற மூன்றை நம்பி தான் இப்போதுள்ள இயக்குநர்கள் படம் எடுக்கிறார்கள்'- எஸ்.ஏ சந்திரசேகர் | SA Chandrasekhar about movies

ராம் அப்துல்லா ஆண்டனி: ‘கத்தி, ரத்தம், சத்தம் என்ற மூன்றை நம்பி தான் இப்போதுள்ள இயக்குநர்கள் படம் எடுக்கிறார்கள்’- எஸ்.ஏ சந்திரசேகர் | SA Chandrasekhar about movies


அறிமுக இயக்குநர் த.ஜெயவேல் இயக்கும் படம், ‘ராம் அப்துல்லா ஆண்டனி’. மூன்று மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பூவையார் ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

‘ராம் அப்துல்லா ஆண்டனி’

‘ராம் அப்துல்லா ஆண்டனி’

நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர், “இப்படத்தின் டிரெய்லர் நன்றாக இருக்கிறது. அதைப் பார்த்த பிறகுதான் நான் இந்த விழாவிற்கு வர முடிவு செய்தேன்.

ஒரு படத்தின் டிரெய்லரைப் பார்த்தவுடன் அந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டவேண்டும். சில படங்களுக்கு ‘டிரெய்லர்” எப்படி கொடுக்கவேண்டும் என்பதே தெரியவில்லை.

வன்முறைப் படங்களைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று எண்ணிக் கத்தி, ரத்தம், சத்தம் என்ற மூன்றை நம்பித்தான் இப்போதுள்ள இயக்குநர்கள் படம் எடுக்கிறார்கள்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *