ரேட்டிங் முதல் வசூல் வரை - ‘தக் லைஃப்’ பரிதாப நிலை ஏன்? | Kamal Haasan Thug Life received one of the lowest ratings and collection

ரேட்டிங் முதல் வசூல் வரை – ‘தக் லைஃப்’ பரிதாப நிலை ஏன்? | Kamal Haasan Thug Life received one of the lowest ratings and collection


மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. கர்நாடகாவில் மட்டும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இப்படம் வெளியாகவில்லை.

வெளியான முதல் நாளில் இருந்தே இப்படத்துக்கு கடும் எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. படத்தின் அட்வான்ஸ் புக்கிங் சிறப்பாக இருந்தநிலையிலும், அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால் இந்திய அளவில் ‘தக் லைஃப்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.17 கோடி மட்டுமே வசூல் செய்தது. இது படக்குழுவுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. எனினும் விடுமுறை தினம் என்பதால் அடுத்தடுத்த நாளில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாள் வெறும் இந்தியாவில் ரூ.22 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் இப்படம் 2 நாட்களில் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படம் வெளியாவதற்கு 2 வாரங்களுக்கு முன்பே படக்குழு பல மாநிலங்களுக்கு சென்று படத்தை ப்ரொமோட் செய்தனர். தமிழகத்திலும் தொடர் நிகழ்ச்சிகள், பத்திரிகையாளர் சந்திப்பு, பேட்டிகள் என சூறாவளியாய் விளம்பரப் பணிகளில் ஈடுபட்டனர். பாடல்கள் ஹிட், கன்னட மொழி சர்ச்சை, கேரள ரசிகர்களை கவர ஜோஜு ஜார்ஜ், இளைஞர்களை கவர சிலம்பரசன், ஜிங்குச்சா பாடலில் சான்யாவின் நடனம் என இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களில் இயல்பான ஹைப்பும் படத்துக்கு கிடைத்தது.

இத்தனையும் இருந்தும் படத்தின் வசூல் இவ்வளவு குறைந்தது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. 38 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் என்றதுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்துக்கு ஏற்பட்டது. உலகத் தரத்தில் ஒரு சினிமா என்ற எதிர்பார்ப்பில் பலரும் படத்தின் போஸ்டர், டைட்டில், டீசர் ஆகியவற்றை வைத்து ஆளுக்கொரு தியரியை எழுதத் தொடங்கி விட்டனர்.

ஆனால் படம் வெளியானதும் தாங்கள் மனதில் கற்பனை செய்த கதைகளுக்கு பக்கத்தில் கூட வராத அளவுக்கு மிகவும் தட்டையான, க்ளிஷேவான ஒரு கதை படத்தில் இடம்பெற்றதை பார்த்ததும் அது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. இதற்கு முன்பு ‘இந்தியன் 2’, ‘கங்குவா’ உள்ளிட்ட படங்கள் சந்தித்ததை போன்று மிக மோசமான ட்ரோல்களை ‘தக் லைஃப்’ படம் எதிர்கொண்டது.

இதுவே இப்படத்தின் வசூல் குறைய காரணமாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் திரைப்படங்களின் ரேட்டிங்கை வெளியிடும் ஐஎம்டிபி இணையதளத்திலும் படத்துக்கு வெறும் 4.4 ரேட்டிங் மட்டுமே கிடைத்துள்ளது. கமல் – மணிரத்னம் கூட்டணியில் வெளியான ‘நாயகன்’ படத்துக்கு இதில் கொடுக்கப்பட்டுள்ள ரேட்டிங் 8.4/10.

பெரிதாக எந்தவித விளம்பரமும் செய்யாத சிறிய பட்ஜெட் படங்கள் கூட மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் பிரம்மாண்ட பட்ஜெட், பெரிய நட்சத்திர பட்டாளம் என இவ்வளவு செலவுகளை செய்தும் திரைக்கதை என்ற ஒன்று சொதப்பியதால் படத்தின் ரேட்டிங் தொடங்கி வசூல் வரை அதள பாதாளத்துக்கு சென்றுள்ளதை இனியாவது இயக்குநர்கள் கவனிக்க வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1364668' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *