‘வார் 2’ படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை பெரும் விலைக் கொடுத்து வாங்கியிருக்கிறார் நாக வம்சி. இவர் ஜூனியர் என்.டி.ஆருக்கு நெருங்கிய நண்பர் ஆவார். இந்த உரிமையை சுமார் 90 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாக வம்சி வாங்கியிருப்பதால் தெலுங்கில் பிரம்மாண்ட வெளியீடு உறுதி என்று ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் உற்சாகமாகி இருக்கிறார்கள்.
இந்தியில் ஜூனியர் என்.டி.ஆர் அறிமுகமாகும் படம் ‘வார் 2’. இதில் ஹ்ரித்திக் ரோஷன், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹ்ரித்திக் ரோஷன் – ஜூனியர் என்.டி.ஆர் இருவருக்கும் இடையே ஆன காட்சிகள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றன. அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது.
ஆந்திராவில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தின் விநியோக உரிமையை ஏசியன் சினிமாஸ், தில் ராஜு மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து கைப்பற்றி இருக்கிறார்கள். ஆனால், ‘வார் 2’ உரிமையினை நாக வம்சி கைப்பற்றி இருக்கிறார். இதனால் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகள் ஒப்பந்தத்தில் கடும் போட்டி நிலவும் என்பது உறுதி.
Yes… it’s #War2…Couldn’t be happier to reunite with my dearest @tarak9999 anna
After #AravindhaSametha and #Devara, it’s time for the hattrick and we are going all in no matter what
Dear fans… get ready!
You are going to witness the man of masses like NEVER before….… pic.twitter.com/1ETM7iJVGM
— Naga Vamsi (@vamsi84) July 5, 2025