விக்ரம் நிறைய போராடித்தான் இந்தத் துறைக்குள்ள வந்திருக்காரு. நிறைய அவமானப்பட்டிருக்காரு. அது உங்களுக்கெல்லாம் தெரியாது, எனக்கு தெரியும்.
யார் அவரை அவமானப்படுத்தியது, அவர்களெல்லாம் இன்னைக்கு என்ன நிலையில இருக்றாங்க என்றதெல்லாம் எனக்கு தெரியும்.
சேது படம் அப்போ ஷூட்டிங் ஸ்பாட்ல கேட்டுட்டே இருப்பாரு, `நான் நல்லா வருவேனா-ன்னு’. சேது படம் எடுத்த பிறகு ரிலீஸ் பண்ண முடியல. அப்பவும் போராடிகிட்டு இருந்தாரு.

அந்த இடைப்பட்ட காலத்துலகூட பிரபுதேவாவுக்கு ஒரு படத்துல டப்பிங் பண்ணிட்டு வந்தாரு. ஒரு டெலிவிஷன் சீரியல் பண்ணனும்-னு நானும் அவரும் எழுதிட்டு இருந்தோம்.
அப்போ அவர்கிட்ட சொன்னேன், `நீங்க அழகா யூத்தா இருக்கீங்க, நல்லா நடிக்றீங்க. அஜித், விஜய்-க்கு ரசிகர்கள் கூடிக்கிட்டே இருக்காங்க.
அவங்க ரெண்டு பேரும் எதிர்காலத்துல என்ன நிலையில இருப்பாங்கனு தெரியல.
ஆனா, ஒன்னு சொல்றேன் நீங்க கடைசி வரைக்கும் சினிமாவுல இருப்பீங்க. சினிமா வேணாம்னு நீங்க ஒதுங்குனாவே தவிர, சினிமா உங்கள ஒதுக்கவே முடியாது. அப்படிப்பட்ட நடிகர் நீங்க அதுல சந்தேகமே இல்ல’ என்றேன்.
சினிமாவுல நான் பார்த்து வியந்த டெடிகேஷன் விக்ரம்தான். ரஞ்சித்துக்கு அது நல்லாவே தெரியும்.
நாம ஜெயிக்கணும்னு அவருக்கு ஒரு வெறி இருந்துச்சு. ஆனா, துருவ்-க்கு அது தேவையில்ல.
ஏன்னா, அப்பா பெரிய ஸ்டார். ஆனா, துருவ் கிட்டயும் அது இருக்றத நான் பார்த்தேன். விக்ரம்-கு பிதாமகன்ல கிடைச்சது, துருவ்-க்கு இந்த படத்துல கிடைச்சிருக்கு” என்று கூறினார்.