‘விக்ரம் 63’ படத்தின் அப்டேட் குறித்த கேள்விக்கு தயாரிப்பாளர் அருண் விஸ்வா பதிலளித்துள்ளார்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க புதிய படம் ஒன்று அறிவிக்கப்பட்டது. அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது, அடுத்த அறிவிப்பு என்ன என்ற எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை. இதனால், இப்படம் கைவிடப்பட்டது என்று இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே ‘3 BHK’ படத்தின் ப்ரீமியர் காட்சியில் கலந்து கொண்டார் அருண் விஸ்வா. அவரிடம் ‘விக்ரம் 63’ குறித்து கேள்வி கேட்டபோது, “அதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கதைக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். விக்ரம் ரசிகர்கள் எந்தவொரு அப்டேட்டையும் கொடுக்கவில்லை என்று என்னை திட்டுகிறார்கள்.
அப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படமாகும். ‘விக்ரம் 63’ குறித்த அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார் அருண் விஸ்வா. இவரது இந்தப் பேச்சு விக்ரம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்திருக்கிறது.