விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சக்தி திருமகன்’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘சக்தி திருமகன்’. விஜய் ஆண்டனியே நாயகனாக நடித்து, இசையமைத்து தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது செப்டம்பர் 5-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
இப்படத்துக்கு முதலில் ‘பராசக்தி’ என்று தலைப்பிடப்பட்டது. பின்பு பேச்சுவார்த்தையின் மூலம் ‘சக்தி திருமகன்’ என்று மாற்றினார்கள். சமீபத்தில் வெளியான ‘மார்கன்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் விஜய் ஆண்டனி. இதனால் ‘சக்தி திருமகன்’ மீது பெரும் நம்பிக்கையுடன் செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்.
’சக்தி திருமகன்’ படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிபழனி, செல் முருகன், கிரண் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்திருக்கிறார்கள். இதற்கு ஒளிப்பதிவாளராக ஷெலி கலிஸ்ட், எடிட்டராக ரேமண்ட் உள்ளிட்டோர் பணிபுரிந்திருக்கிறார்கள்.