‘லக்கி பாஸ்கர்’ 2-ம் பாகம் திரைப்படத்தை எடுக்க திட்டமிருப்பதாக இயக்குநர் வெங்கி அட்லுரி தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிக்கும் படத்தினை இயக்கி வருகிறார் வெங்கி அட்லுரி. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் சூர்யா படத்தின் கதைக்களம் குறித்து பேசியிருந்தார். அப்பேட்டியில் ‘லக்கி பாஸ்கர்’ 2-ம் பாகம் குறித்தும் பேசியிருக்கிறார்.
’லக்கி பாஸ்கர்’ 2-ம் பாகம் எடுக்க திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார் இயக்குநர் வெங்கி அட்லுரி. துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லக்கி பாஸ்கர்’. நாக வம்சி தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் கொண்டாடப்பட்டது.
’லக்கி பாஸ்கர்’ 2-ம் பாகம் எப்போது தொடங்கும் உள்ளிட்ட எந்தவொரு தகவலையும் இயக்குநர் வெங்கி அட்லுரி தெரிவிக்கவில்லை. இதனால் சூர்யா படத்தை முடித்துவிட்டு தொடங்குவாரா என்பது விரைவில் தெரியவரும்.