வேள்பாரி: `நான் வேள்பாரியை முழுசா படிக்கல, அதற்கு காரணம்...’ - ரஜினி

வேள்பாரி: `நான் வேள்பாரியை முழுசா படிக்கல, அதற்கு காரணம்…’ – ரஜினி


விகடன் பிரசுரத்தில், எம்.பி சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி”.

இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. இதனைக் கொண்டாடும் விதமாக இப்புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா இன்று (ஜூலை 11) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ‘வேள்பாரி 1,00,000’ வெற்றிச் சின்னத்தைத் திறந்துவைத்து நடிகர் ரஜினிகாந்த் சிறப்புரையாற்றினார்.

வேள்பாரி 1 லட்சம் பிரதிகள் வெற்றி விழா - ரஜினிகாந்த்

வேள்பாரி 1 லட்சம் பிரதிகள் வெற்றி விழா – ரஜினிகாந்த்

ரஜினியை ஏன் கூப்பிட்டிருக்காங்கனு..!

அப்போது, “இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு கோபிநாத், ரோகினி, உதயச்சந்திரன் என பெரும் அறிவுசார்ந்தவர்களை அழைத்திருக்கிறார்கள். ஒரு நடிகன் வந்து பேச வேண்டுமென்றால் நடிகர் சிவக்குமாரை அழைத்திருக்கலாம். எவ்வளவு படித்தவர், மகாபாரதம், குறள் என எதைப்பற்றியும் மணிக்கணக்கில் பேசுவார். இல்லையென்றால் கமல்ஹாசனை அழைத்திருக்கலாம். அவரும் எவ்வளவுப் பெரிய அறிவாளி, படித்திருக்கிறார், படித்துக்கொண்டே இருக்கிறார்.

அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இந்த 75 வயதிலும் கூலிங்கிளாஸ்போட்டுக்கொண்டு ஸ்லோ மோஷனில் நடந்துவரும் இந்த ரஜினியை ஏன் கூப்பிட்டிருக்காங்கனு யாராவது நினைப்பார்கள் என்றும் யோசித்தேன்.

வேள்பாரி 1 லட்சம் பிரதிகள் வெற்றி விழா - ரஜினிகாந்த்

வேள்பாரி 1 லட்சம் பிரதிகள் வெற்றி விழா – ரஜினிகாந்த்

எனக்குப் பிடித்த நாவலாசியர்களில் ஒருவர் ஜெயகாந்தன்!

இந்த உலகமே புத்தகங்களால் இயங்குகிறது. கதை இல்லாதவர்கள் என இந்த உலகில் யாரும் இல்லை. What is history, His Story தான் history. புத்தகம் வாசிப்பது அருமையான அனுபவம். ராம கிருஷ்ணா ஆசிரமத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புத்தகம் வாசிக்க வேண்டும் என்பது கட்டாயம். அப்போது வாசிக்க ஆரம்பித்தது. அம்புலி மாமாவில் தொடங்கி வெங்கடேஷ் ஐயங்கார், கே.வி ஐயர், ஜி.பி ராஜரத்தினம், கைலாசம் என இவர்கள் எல்லாம் மிகப்பெரும் நாவலாசிரியர்கள்.

பைலப்பா என்பவர் எழுதிய பர்வா எனும் நாவல் சீனா, ஜப்பான் என 36 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது. அருமையான புத்தகம். தமிழ்நாட்டுக்கு வந்தபோது ஜாவர் சீதாராமன் எழுதிய உடல் பொருள் ஆனந்தி நாவலில் தொடங்கி ஜானகிராமன், பார்த்த சாரதி, சிவசங்கரி, இந்துமதி, ராஜேஷ் குமார், ஜெயகாந்தன் எனப் பலரின் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். தமிழில் எனக்குப் பிடித்த நாவலாசியர்களில் ஒருவர் ஜெயகாந்தன்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *