மலையாள நடிகையான நிமிஷா சஜயன், தமிழில் சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மிஷன்: சாப்டர் 1 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘டப்பா கார்டல்’ என்ற வெப் தொடரில் மாலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் ஷபானா ஆஷ்மி, ஜோதிகா உட்பட பலர் நடித்துள்ளனர்.
இதில் நடித்தது பற்றி நிமிஷா சஜயன் கூறும்போது, “இந்த வாய்ப்பு வந்த போது, அதை மறுக்க எனக்குக் காரணம் ஏதும் இல்லை. இது 5 பெண்களைப் பற்றிய வலிமையான கதை. என் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருந்தது.
ஷபானா ஆஷ்மியுடன் நடிக்க வேண்டும் என்பது கனவைப் போன்றது. அது இந்த தொடரில் எனக்கு வாய்த்தது. என் முன்னால் அவர் நடிப்பதைப் பார்க்கும்போது அது ஒரு மாயம் போல தெரிந்தது. ஜோதிகாவும் எனக்குப் பிடித்த நடிகைகளில் ஒருவர். அவருடன் நடித்தது மறக்க முடியாததாக இருந்தது’’ என்றார்.