Last Updated : 16 Jul, 2025 07:13 AM
Published : 16 Jul 2025 07:13 AM
Last Updated : 16 Jul 2025 07:13 AM

பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால். ஆக்ஷன் ஹீரோவான இவர், தமிழில் துப்பாக்கி, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்திலும் நடித்துள்ளார். இவர் இப்போது ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ என்ற ஹாலிவுட் ஆக்ஷன் படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அவருடன் ஆண்ட்ரு கோஜி, நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் கேப்காமின் பிரபலமான வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டது.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow
FOLLOW US
தவறவிடாதீர்!