இந்த நிலையில், டீசல் பட இயக்குநர் சண்முகம் முத்துசாமி,, தன் எக்ஸ் பக்கத்தில், “நெடுஞ்சாலைகளில், இருசக்கர வாகன ஓட்டிகள் மிக மோசமாக சாலைவிதியை பின்பற்றாமல், வாகனங்களை இயக்குவது குறித்து கடந்த 3 ஆண்டுகளாக பல பதிவுகளை நான் வெளியிட்டு வந்தேன்”‘ என்றார்.
என்போன்ற பலரின் பதிவுகளையும் கண்டேன். ஆனால் அரசு, அதுகுறித்து கவனம் செலுத்தாமல் விட்டதன் விளைவு, இவ்வளவு உயிர் பலியாகி இருக்கிறது.

மக்கள் சுட்டிக்காட்டும் குறைகளை ஏன் கவனிக்க மறுத்து விடுகிறீர்கள் நெடுச்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சார்? போர்க்கால அடிப்படையில் புதிய சாலை விதிகளை உருவாக்கி அதை பின்பற்ற வேண்டுகிறேன்.
ஹைதராபாத் பெங்களூரு சாலை தனியார் பேருந்து விபத்தில் பலியான அனைவரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும். ஓம் சாந்தி” எனப் பதிவிட்டுள்ளார்.

