'18 ஆண்டுகளாக ஷாருக் கான் கற்றுக்கொடுத்த பாடத்தை பின்பற்றுகிறேன்': நடிகை தீபிகா படுகோனே | Actress Deepika Padukone has said that Shah Rukh Khan taught her her first lesson in acting 18 years ago.

’18 ஆண்டுகளாக ஷாருக் கான் கற்றுக்கொடுத்த பாடத்தை பின்பற்றுகிறேன்’: நடிகை தீபிகா படுகோனே | Actress Deepika Padukone has said that Shah Rukh Khan taught her her first lesson in acting 18 years ago.


பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கல்கி 2 படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தீபிகா படுகோனே விதித்த கடுமையான நிபந்தனைகளால் அவர் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த தீபிகா படுகோனே தரப்பு கதையில் மாற்றம் செய்ததால் படத்தில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது தீபிகா படுகோனே நடிகர் ஷாருக் கானின் கிங் படத்தில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தீபிகா படுகோனே பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் ஷாருக் கானின் கையை பிடித்த படி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில், “18 ஆண்டுகளுக்கு முன்பு ஓம் சாந்தி ஓம் படத்தில் நடித்தபோது ஷாருக் கான் கற்றுக்கொடுத்த முதல் பாடத்தில், படத்தின் வெற்றியை விட படத்தை தயாரிப்பது மற்றும் யாருடன் நடிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று தெரிவித்தார்.

அதனால் நான் அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை. ஷாருக் கான் சொன்னதிலிருந்து நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் அவர் கற்றுக்கொடுத்ததை பயன்படுத்தியிருக்கிறேன்.

அதனால்தான் நாங்கள் எங்கள் 6வது படத்தில் மீண்டும் ஒன்றாக சேர்ந்திருக்கிறோம்”‘ என்று குறிப்பிட்டுள்ளார். தீபிகா படுகோனே தொடர்ச்சியாக நடிகர் ஷாருக் கானுடன் நடித்து வருகிறார். இந்த ஜோடி நடிக்கும் அனைத்து படங்களும் ஹிட்டாகிறது. எனவே ஷாரு க்கான் தனது புதிய படமான கிங் படத்திலும் தீபிகா படுகொனேயை ஹீரோயினாக நடிக்க வைத்து இருக்கிறார். இதற்கு முன்பு இருவரும் 5 படங்களில் ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர்.

கிங் படத்தில் ஷாருக் கானின் மகள் சுஹானா கானும் அறிமுகமாகிறார். தற்போது சுஹானா விளம்பர படங்களில் நடித்து வருகிறார். ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் இயக்கிய பாலிவுட் பட்ஸ் வெப் சீரிஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *