ராதிகா ராவ் – வினய் சப்ரு இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் ‘சனம் தேரி கஸம்’. ஹர்ஷவர்தன் ரானே மற்றும் மவ்ரா ஹோகனே அறிமுகமான இப்படம் வெளியான சமயத்தில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபீசில் படுதோல்வியை தழுவியது.
இந்த நிலையில், இப்படம் கடந்த பிப்.7 அன்று ரீ-ரிலீஸ் ஆனது. படக்குழு எதிர்பார்த்ததை விட இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர். இதன் விளைவாக இப்படம் முதல் நாளில் ரூ. 4.25 கோடி வசூலித்தது. இது 2016ஆம் ஆண்டு முதல் நாள் வெளியானபோது வசூலித்த தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகும். 2வது நாளில் இப்படத்தின் வசூல் 15% அதிகரித்து ரூ.5 கோடியை கடந்தது. 2016ல் இப்படம் மொத்தமாக வசூலித்த தொகையான ரூ.9 கோடியை, மறுவெளியீட்டில் இப்படம் இரண்டே நாட்களில் முறியடித்துள்ளது.
மூன்று நாட்களில் இப்படம் சுமார் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அதாவது இதன் ஒரிஜினல் வாழ்நாள் வசூலை காட்டிலும் ரூ.176% சதவீதம் அதிகம் வசூலித்துள்ளது ‘சனம் தேரி கஸம்’ திரைப்படம். எந்தவித ப்ரோமோஷனும் இல்லாமல் இப்படத்தை ரி-ரிலீஸ் செய்த படக்குழுவினருக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.