இந்தப் படம் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கிலும், கணேஷ், ப்ரியாமணி நடிப்பில் கன்னடத்திலும், கரீனா கபூர் நடிப்பில் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
மூன்று ரீமேக்களில் எந்த கதாநாயகியின் கதாபாத்திரம் எஸ்.ஜே. சூர்யாவுக்கு பேவரைட்டானது என்பதை ‘சரிப்போதா சனிவாரம்’ படத்தின் புரொமோஷன் சமயத்தில் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்திருந்தார்.
அவர், “ஜெனிஃபர் கதாபாத்திரத்தில் ஜோதிகாதான் பேவரைட். பின்னொரு நாள், நான் தெலுங்கு படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது ஒருவர் என்னிடம் மூன்று ‘குஷி’ படங்களையும் பார்த்திருக்கிறேன்.
அதில் பூமிகாதான் என்னுடைய பேவரைட் என்றார். அதுபோல மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரின் கேரக்டர் பிடித்தமானதாக இருக்கும்,” என்றார்.
இப்படத்தில் ‘மொட்டு ஒன்று’ பாடல் இன்றுவரை எவர்கிரீனாக பலருக்கும் பிடித்த ஒன்று. அப்பாடலுக்குப் பின்னால் ஒரு கதையும் இருக்கிறது.
மைக்கேல் ஜாக்சனின் ‘Why You Wanna Trip on Me’ என்ற பாடலின் மூலம் இன்ஸ்பயராகிதான் ‘குஷி’ படத்தின் இந்தப் பாடலை கம்போஸ் செய்திருப்பார்கள்.