ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “3BHK’. நாளை இத்திரைப்படம் (ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது ‘லப்பர் பந்து’ பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ‘3BHK’ படத்தைப் பாராட்டி இருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ நானும் ஒரு டைம் வரைக்கும் எங்கப்பாவோட கனவ தூக்கிட்டு சுத்திட்டு இருந்ததனாலயோ என்னவோ இந்தப்படம் பாத்ததுல இருந்து கொஞ்சம் என் வீட்டு படம் மாதிரியே இருக்கு..கண்டிப்பா பாக்குற உங்களுக்கும் அப்டிதான் இருக்கும் …போய் பாருங்க, கண்டிப்பா connect ஆகும். நெருக்கமான வெற்றிக்கு வாழ்த்துக்கள்” என்று பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.