ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘3BHK’.
இப்படம் நாளை(ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று (ஜூலை3) நடைபெற்றது.
இதில் பேசிய தேவயானி, ‘ இந்தப் படத்தின் படபிடிப்பு நாட்கள் அருமையாக இருந்தது. ரொம்ப பாசிட்டிவ் ஆன படம். நேர்த்தியான ஒரு படம் எடுப்பதற்கு முயற்சி செய்திருக்கிறோம்.
இந்தப் படத்தில் நாங்கள் ஒரு குடும்பமாக வாழ்ந்திருக்கிறோம். நடிப்பதற்கு அருமையான கதாபாத்திரம் கொடுத்திருந்தார்கள். சரத்குமார் சாரும், தேவையானியும் நடிக்க வேண்டும் என்றால் அந்த அளவிற்கு ஒரு கதை இருந்தால் மட்டுமே நடிக்க முடியும்.

இந்தக் கதைக்கு நாங்கள் இருவரும் தேவைப்பட்டதால் தான் எங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த படம் நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR