Last Updated : 29 Dec, 2024 12:36 AM
Published : 29 Dec 2024 12:36 AM
Last Updated : 29 Dec 2024 12:36 AM

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் ‘தமிழன்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்போது ஹாலிவுட் படங்களில் நடித்துவரும் அவர், ராஜமவுலி இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். ‘இண்டியானா ஜோன்ஸ்’ படம் போல உலக அளவிலான ஆக் ஷன் அட்வென்சர் படமாக இது இருக்கும் என்று ராஜமவுலி தெரிவித்திருந்தார்.
மகேஷ்பாபுவின் கேரக்டரை ஹனுமனை நினைவூட்டும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு ஆப்பிரிக்கக் காடுகளில் நடக்க இருக்கிறது. இதில் வில்லனாக நடிக்க விக்ரம், பிருத்விராஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக முன்பு தகவல்கள் வெளியாயின. இப்போது நடிகை பிரியங்கா சோப்ரா, இதில் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்கிறார்கள். இது உலகளாவிய படம் என்பதாலும் ஹாலிவுட்டில் நடிக்கும் பிரியங்கா சோப்ராவை இதில் நடிக்க வைத்தால் படத்தை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்ல உதவியாக இருக்கும் என படக்குழு நம்புவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்துவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
FOLLOW US
தவறவிடாதீர்!