ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான “அண்ணாத்த’ திரைப்படம் அதிகமான விமர்சனங்களை பெற்றது. அண்ணன், தங்கை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகை குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், வேலராமமூர்த்தி என்று பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அண்ணாத்த படத்தில் நடித்தது குறித்து குஷ்பு பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “அண்ணாத்த படத்தில் மீனாவும் நானும் இணைந்து நடித்தோம். நாங்கள் இருவரும் படத்தில் கதாநாயகிகள் என்றுதான் ஆரம்பத்தில் தெரிவித்தனர். ரஜினிக்கு படத்தில் வேறு ஜோடி இல்லை என்றும், நாங்கள் இருவரும் தான் கடைசி வரை படத்தில் வருவோம் என்று உத்தரவாதம் செய்தனர். அதனை நம்பிதான் நடித்தேன். முதலில் எனது கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டு இருந்தது. ஆனால், படத்தில் திடீரென்று ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா வந்தார்.