இந்நிலையில், ட்ரெண்டிங்கில் இருக்கும் தீமா தீமா பாடலுக்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் பதிவு
இந்த ரீஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், “என் தூய்மையான தங்கத்துடனான ஒரு தசாப்தத்தைக் கடந்த தூய்மையான காதலைப் போற்றுகிறேன். லவ் யூ சோ மச் நயன்தாரா. காதலிலும் இரக்கத்திலும் நம்பிக்கை கொண்டுள்ள எல்லாருக்குக் காதலர் தின வாழ்த்துகள்! ஒவ்வொரு நாளும் தூய்மையான நேர்மையான காதலை வெளிப்படுத்தும் என் மனைவிக்கு நன்றி. 3,650 நாட்களும் மேலாகக் காதலித்துக்கொண்டிருக்கிறோம்! கடவுளின் ஆசியுடன் மகிழ்ச்சியாக இந்த அன்பை நம் குழந்தைகளுக்கும் கடத்துகிறோம்.” எனப் பதிவிட்டுள்ளார்.
Nayanthara கமென்ட்
இந்த பதிவின் கமென்ட்டில், “நான் என் முழு ஆன்மாவுடனும் இதயத்துடனும் உன்னைக் காதலிக்கிறேன் உயிரே” எனப் பதிவிட்டுள்ளார் நயன்தாரா.