இந்தப் படத்தின் ட்ரெய்லரை பாலய்யா சார் பார்த்துப் பாராட்டினார். இந்திய அமானுஷ்ய புலனாய்வாளர் பற்றிய திரைப்படம் இது. இதற்காக கௌரவ் திவாரி (paranormal investigator) என்பவரின் வாழ்க்கை, வீடியோக்களை நிறையப் பார்த்துக் கற்றுக்கிட்டேன். இது ஹாரர் திரில்லர் திரைப்படம் இது, எங்களுக்கும் அனுமாஷ்யங்கள் குறித்த பயம் இருக்கும். ஷூட்டிங்கின் போதே எல்லாருக்கும் கொஞ்சம் பயம் இருந்தது. போகப் போகப் பழகிடுச்சு.

‘ஈரம்’ படம் பார்க்கும்போது எனக்கு பயமில்லை. ஆனால், அமானுஷ்ய புலனாய்வாளராக இந்தப் படத்தில் நடித்திருப்பதால் போய், அமானுஷ்ய பயன் வந்தது. கடவுள் சக்தி இருப்பதுபோல் பேய், அமானுஷ்யம் இருப்பதாக கொஞ்சம் நம்பிக்கை இந்தப்படத்திற்குப் பிறகு வந்துவிட்டது.
வில்லனாக நடிக்கவும் ஆசை இருக்கு. கதை நல்லா இருந்தா நடிப்பேன். யார்கூட வேண்டுமென்றாலும் வில்லனாக நடிப்பேன். கதைதான் முக்கியம். அஜித், விஜய் சாருடன் வில்லனாக நடிக்க ஆசை இருக்கு” என்று பேசியிருக்கிறார்.