Suzhal 2:``மணிகண்டன் அதைப் பண்ணியே ஆகணும்!'' - புஷ்கர் & காயத்ரி பேட்டி

Suzhal 2:“மணிகண்டன் அதைப் பண்ணியே ஆகணும்!'' – புஷ்கர் & காயத்ரி பேட்டி


இயக்குநர் புஷ்கர் – காயத்ரி எழுத்தில் உருவாகி அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது, `சுழல்’ வெப் சீரிஸின் இரண்டாவது சீசன். இரண்டாவது சீசனின் ரிலீஸையொட்டி புஷ்கரையும் காயத்ரியையும் சந்தித்துப் பேசினோம்.

அனைத்துக் கேள்விகளுக்கும் இருவரும் இணைந்தே பதில் அளித்தனர். “எங்களுக்கு அமேசான் கூட ஒரு நல்ல புரிதல் இருக்கு. இன்னும் ஏதாச்சும் பண்ணுங்கன்னுதான் சொல்வாங்க. தொடரை மேம்படுத்த மட்டும் தான் ஏதாச்சும் பரிந்துரைப்பாங்க. முதல் சீசன் எழுதி முடிச்சதுக்கு அப்புறம் எங்களுக்கு இந்தி கமிட்மென்ட்ஸ் இருந்தது. அதை முடிச்சுட்டு வந்து பண்றோம்னு சொன்னோம். அமேசான் தரப்புல ‘நீங்க எழுதி முடிச்சுட்டீங்க. வேற ஏதாச்சும் டைரக்டரை வச்சு நீங்க மேற்பார்வை பண்ணுங்க’ன்னு கேட்டாங்க.

VS YouTube Madhavan PushkarGayatriSuzhal2 7’05” Thedalweb Suzhal 2:``மணிகண்டன் அதைப் பண்ணியே ஆகணும்!'' - புஷ்கர் & காயத்ரி பேட்டி
புஷ்கர் – காயத்ரி, சுழல் 2

‘நாங்க ரத்தம் சிந்தி எழுதி இருக்கோம். இந்த கதை எங்கக் குழந்தை’னு ரொம்ப சீன் போட்டோம். அப்புறம் பேசி ஒத்துக்கிட்டோம். இயக்குநர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் கரெக்டா செட் ஆயிட்டாங்க. அவங்களுக்கு திறமை அதிகம். சேர்ந்தும் நல்லா வேலை பார்த்தாங்க. எங்களுக்கும் அது ரொம்பப் பிடிச்சது.

சரவணன் சார் பண்ணியிருக்கும் கேரக்டர் எழுதி டிஸ்கஸ் பண்ணும்போதே அவர் முகம்தான் வந்துச்சு. அந்த கேரக்டருக்கு நிறைய வசனங்கள் ஒரு மாதிரி குசும்பா தான் இருக்கும். அதைப் படிக்கும்போதே டீம்ல இருக்குறவங்களுக்கும் அவரு பேரு தான் தோனுச்சு.

லால் சாரைத் தேர்ந்தெடுக்கிறதுக்குத்தான் கடினமாக இருந்துச்சு. அந்த கேரக்டரைப் பார்த்தாலே ரொம்ப மதிக்கத்தக்க ஆளாதான் தோணும். எங்க ‘ஓரம் போ’ படத்துல லால் சார் நடிச்சிருக்கார். அப்படித்தான் அவரும் வந்தார். இது இல்லாம ஒரு எட்டு பெண் கதாபாத்திரங்கள் இருக்கு. அதற்கான நடிகைகள தேர்ந்தெடுக்கத்தான் ரொம்ப நாள் ஆச்சு. கிட்டத்தட்ட அதுக்கே 8 மாதங்கள் ஆச்சு.

VS YouTube Madhavan PushkarGayatriSuzhal2 6’30” Thedalweb Suzhal 2:``மணிகண்டன் அதைப் பண்ணியே ஆகணும்!'' - புஷ்கர் & காயத்ரி பேட்டி
புஷ்கர், சுழல் 2

`ஏன் இவ்வளோ மெதுவாக இருக்கீங்கன்’னு கேட்கிறாங்க. ஸ்கிரிப்ட் ரைட்டிங் ரொம்ப நாளாக போச்சு. இதுக்கு முன்னாடி இரண்டு கதை எழுதி முடிச்சுட்டு ‘இல்ல இப்போ இது வேண்டாம், இன்னும் கொஞ்சம் ஏதாவது பண்ணுவோம்’னு அதை அப்படியே வெச்சுட்டோம். இப்போ நாங்க நல்ல இடத்துல இருக்கோம். அதனால நாங்க இப்ப தயார்தான்.” என்றவர்கள், “மாதவன் `ராக்கெட்ரி’ படத்தின் முதல் டிராஃப்ட் எழுதின உடனே எங்களுக்கு அனுப்பினார். அப்போ வேற ஒரு டைரக்டர், தயாரிப்பாளரை வெச்சு பண்ணலாம்னு இருந்தார்.

அப்புறம் அவரே பண்றேன்னு சொன்னதுக்கு ‘எவ்வளவுதான் பண்ணுவீங்க மேடி’னு கேட்டேன். அப்புறம் பார்த்தா சூப்பரா பண்ணிட்டாரு. முதல்ல சில வேலைகள் முடிஞ்சதுக்குப் பிறகு எங்க ஆபீஸ்ல எங்களுக்குப் படத்தை போட்டுக் காட்டினார். எங்களோட உட்கார்ந்து அவர் பார்க்கல. கீழ டென்ஷன்ல குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துட்டே இருந்தார். படம் எங்களுக்கு ரொம்பப் புடிச்சுது. அதை அவர்கிட்ட சென்னதுக்குப் பிறகுதான் ரிலாக்ஸ் ஆனார். அதுக்குள்ள 50 சிகரெட் ஸ்மோக் பண்ணி வெச்சுருக்கார்”. என்றனர்.

VS YouTube Madhavan PushkarGayatriSuzhal2 6’19” Thedalweb Suzhal 2:``மணிகண்டன் அதைப் பண்ணியே ஆகணும்!'' - புஷ்கர் & காயத்ரி பேட்டி
புஷ்கர் – காயத்ரி, சுழல் 2

மணிகண்டன் பற்றி இருவரும் பேசுகையில்,“மணிகண்டன் நம்ம வீட்டுப்புள்ள. உடம்பெல்லாம் திறமைதான். ரொம்பப் பெருமையா இருக்கு. அவர் வளர்ச்சியைப் பார்த்து. அது லக் கிடையாது. அவர் ரொம்ப யதார்த்தமான பையன். அவருக்கு மைன்ட்ல செட் ஆகலைன்னா அந்தக் கதையைப் பண்ணமாட்டார். எது பண்றாரோ அது சூப்பரா பண்ணுவார் . விஜய் சேதுபதிக்கு அப்புறம் அதிகமாக அறிமுக இயக்குநர்களோட படம் பண்ணினது மணிகண்டன்தான். விகடன் மூலமாக ஆடியன்ஸ்க்கு சொல்லிக்கிறோம். ஒரு கதை இருக்கு. அது அவர் மட்டும்தான் இயக்கி நடிக்க முடியும். எங்களுக்கு அந்தக் கதை ரொம்பப் பிடிக்கும் . பயங்கர பிஸி நடிகர் ஆயிட்டாரு. ஏதாச்சும் ஒரு கேப்ல அதைப் பண்ணிதான் ஆகணும். ” என்றனர்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *