`மொஸார்ட், பீத்தோவன்... இப்போ இளையராஜா; இது அப்பாவின் நீண்டநாள் ஆசை' - கார்த்திக் ராஜா நெகிழ்ச்சி | Karthik Raja about Ilayaraja London Symphony and his wish

`மொஸார்ட், பீத்தோவன்… இப்போ இளையராஜா; இது அப்பாவின் நீண்டநாள் ஆசை’ – கார்த்திக் ராஜா நெகிழ்ச்சி | Karthik Raja about Ilayaraja London Symphony and his wish


லண்டனில் அப்பல்லோ அரங்கில் வருகின்ற மார்ச் 8-ம் தேதி அன்று புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்யவுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.

இந்நிலையில் இன்று காலை லண்டனுக்குச் செல்லும் இளையராஜாவை வாழ்த்தி வழிஅனுப்ப சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அப்போது “நம் பெருமையைப் பறைசாற்ற லண்டன் செல்கிறேன். இது என்னுடைய பெருமையில்லை. நம் பெருமை. நம் தமிழ்நாட்டின் பெருமை. “incredible India’ போல நான் ‘incredible ilayaraja’. என்னைப்போல ஒருவர் இதுக்குமேல யாரும் வரப்போறதும் இல்ல, வந்ததும் இல்ல” என்று பெருமிதத்துடன் பேசியிருந்தார்.

இந்நிலையில் இளையராஜாவின் மூத்தமகனும், இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா, “அப்பாவோட இசையில நம்ம தமிழ் மக்கள் உருகியிருக்காங்க. நம்மை ஆண்ட ஆங்கிலேயன் ஊருக்குப் போய் அங்கேயே டேக்கா காண்பிக்கிற மாதிரி, நம்ம ஊர் ஆள் அங்க சிம்பொனி அரங்கேற்றுவது தமிழனாக ரொம்பப் பெருமையாக இருக்கு.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *