சுந்தர்.சி இயக்கி நடித்திருக்கும் படம் “கேங்கர்ஸ்’. இதில் சுந்தர்.சி உடன் வடிவேலு, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர்.
தவிர மைம் கோபி, அருள்தாஸ், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று (ஏப்ரல் 24) திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
இந்நிலையில் படத்தைப் பார்த்த சிம்பு படக்குழுவைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்த பதிவில், “‘கேங்கர்ஸ்’ திரைப்படம் பார்த்தேன். ஒரே சிரிப்பு சரவெடிதான். வடிவேலு சார் அவரின் மேஜிக்கால் மொத்த படத்தையும் தன்வசப்படுத்திவிட்டார்.
சுந்தர் .சி அண்ணாவுக்கும் படக்குழுவிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.