‘ரெட்ரோ’ திரைப்படத்தோடு சசிகுமாரின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, நானியின் ‘ஹிட் 3’, அஜய் தேவ்கனின் ‘ரைடு 2’ ஆகிய திரைப்படங்களும் வெளியாகின்றன.
தன்னுடைய திரைப்படத்துடன் வெளியாகும் இந்த திரைப்படங்களுக்கும் நடிகர் சூர்யா வாழ்த்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், “அன்புள்ள சசி, சிம்ரன், நானி, அஜய் தேவ்கன் சார் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘ஹிட் 3’, ‘ரைடு 2’ ஆகிய திரைப்படங்களின் அத்தனை குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘ரெட்ரோ’ படத்திற்கு அன்பான ரசிகர்கள் கொடுக்கும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நம்முடைய இந்த ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி பெறட்டும்.
நாளை திரையரங்குகளில் உங்களை எண்டர்டெயின் செய்யட்டும்” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.