அதன்படி கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கையில் நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஷ்வின், செஃப் தாமு உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் அஜித்தைச் சந்தித்தது குறித்து செஃப் தாமு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

“ பத்மஸ்ரீ விருதைப் பெறுவதற்காக சென்றபோது ராஷ்டிரபதி பவனில் நடிகர் அஜித்தை சந்தித்தேன். நானும் எனக்கு மிகவும் பிடித்த நடிகரும் பத்ம விருதுகளைப் பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. அஜித் மிகவும் ஜாலியான, எளிமையான மனிதர்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.