1361373 Thedalweb மேஷம் முதல் மீனம் வரை: ஒரு வரியில் குரு பெயர்ச்சி பலன்களும் பரிகாரங்களும் | explanation about guru peyarchi 2025

மேஷம் முதல் மீனம் வரை: ஒரு வரியில் குரு பெயர்ச்சி பலன்களும் பரிகாரங்களும் | explanation about guru peyarchi 2025


வரும் 14.05.2025 புதன்கிழமை, இரவு 11 மணி 20 நிமிடத்தில் குரு பகவான் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். 12 ராசிகளுக்கும் சுருக்கமான ஒரு வரி பலன்களும், பரிகாரங்களும் இங்கே…

மேஷம்: மேஷம் ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி மன நிறைவையும், தெளிவான சிந்தனையையும் தருவதாக அமையும். பரிகாரம்: சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு முன்பிருக்கும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வழிபடுங்கள். மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு உணவு, உடை வாங்கிக் கொடுங்கள். முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.

ரிஷபம்: ரிஷபம் ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி திறம்பட செயல்பட்டு இலக்கை எட்டிப்பிடிக்க வைப்பதாக அமையும். பரிகாரம்: சென்னை, பூந்தமல்லி – தக்கோலம் அருகில் இலம்பையங்கோட்டூரில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வழிபடுங்கள். வாய் பேச முடியாதவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.

மிதுனம்: மிதுனம் ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி தடைகள் எதுவானாலும் சமாளிக்கும் தைரியத்தை தருவதாக அமையும். பரிகாரம்: திருச்சி துவாக்குடி அருகில் திருநெடுங்களத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபடுங்கள். ஆசிரமத்தில் வாழும் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுங்கள். எதிலும் நன்மையே கிட்டும்.

கடகம்: கடகம் ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதாக அமையும். பரிகாரம்: மதுரை – சோழவந்தான் அருகே குருவித்துறையில் வீற்றியிருக்கும் ஸ்ரீகுருபகவான், சித்திர ரத வல்லப பெருமாள், செண்பகவள்ளித் தாயாரை வியாழக்கிழமைகளில் வழிபடுங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உணவு, உடை வாங்கிக் கொடுங்கள். தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.

சிம்மம்: சிம்மம் ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி புதிய அணுகுமுறையால் வெற்றி பெற வைப்பதாக அமையும். பரிகாரம்: கும்பகோணம் அருகில் தேப்பெருமாநல்லூரில் வீற்றிருக்கும் குருபகவான், ஸ்ரீவிஸ்வநாத சுவாமி உடனுறை ஸ்ரீவேதாந்தநாயகி அம்மனை வியாழக்கிழமைகளில் வழிபடுங்கள். ஏழை மாணவனின் படிப்புக்கு முடிந்த உதவியை செய்யுங்கள். நல்லது நடக்கும்.

கன்னி: கன்னி ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி நிதானித்து செயல்பட வைத்து வெற்றி காண வைப்பதாக அமையும். பரிகாரம்: தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோயிலில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபட்டு வாருங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள். விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.

துலாம்: துலாம் ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி எல்லா வகையிலும் வெற்றியையும், மகிழ்ச்சியையும் அள்ளித் தருவதாக அமையும். பரிகாரம்: புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசலில் அருள்பாலிக்கும் விருத்தபுரீஸ்வரர், பெரியநாயகி அம்மன், தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் வணங்கிவிட்டு வாருங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். எல்லாவகையிலும் முன்னேற்றமுண்டு.

விருச்சிகம்: விருச்சிகம் ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி நிதானத்துடன் இலக்கை எட்ட வைப்பதாக அமையும். பரிகாரம்: உத்திரமேரூர் – காஞ்சிபுரம் செல்லும் வழியில் திருப்புலிவனத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிம்ம தட்சிணாமூர்த்தி, வியாக்ரபுரீஸ்வரர் உடனுறை அமிர்தகுசலாம்பாளை வியாழக்கிழமைகளில் வணங்குங்கள். காது கேளாதோருக்கு உதவுங்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

தனுசு: தனுசு ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி புது சிந்தனைகளையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி தருவதாக அமையும். பரிகாரம்: ஆலங்குடி திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி பகவானை வியாழக்கிழமைகளில் சென்று 24 தீபங்கள் ஏற்றி வணங்குங்கள். ஆபத்சகாயேஸ்வரரையும், ஏலவார் குழலி அம்பாளையும் வழிபடவும். துப்புரவு தொழிலாளர்களுக்கு ஏதேனும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். தடைகள் உடைபடும்.

மகரம்: மகரம் ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி புதுப் புது யுக்திகளை கையாண்டு இலக்கை எட்டிப் பிடிக்க வைப்பதாக அமையும். பரிகாரம்: தஞ்சாவூருக்கு அருகிலுள்ள தென்குடித் திட்டையில் அருள்பாலிக்கும் வசிஷ்டேஸ்வரர் – உலகநாயகி அம்மனையும், குருபகவானையும் வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வழிபட்டு வாருங்கள். கோயில் அன்னதானப் பணிக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள். எல்லா வகையிலும் வெற்றி தேடி வரும்.

கும்பம்: கும்ப ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி லட்சியப் பாதையை நோக்கி பயணிக்க வைப்பதாக அமையும். பரிகாரம்: சென்னை பாடியில் அமைந்துள்ள திருவலிதாயத்தில் வீராசன கோலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். தந்தையை இழந்த பிள்ளைகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். சகல செல்வங்களும் கிடைக்கும்.

மீனம்: மீனம் ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி, தடைகளை தகர்த்தெறிந்து வெற்றிக் கனியை சுவைக்க வைப்பதாக அமையும். பரிகாரம்: தேனி மாவட்டம் குச்சனூரில் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் அருள்பாலிக்கும் குருபகவானை வியாழக்கிழமைகளில் சென்று வழிபட்டு வாருங்கள். பார்வையற்றவர்களுக்கு உங்களால் இயன்றதை செய்யுங்கள். எதிலும் வெற்றியுண்டு. ஒவ்வொரு ராசியினருக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களுக்கு > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

– முனைவர் கே.பி.வித்யாதரன்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1361373' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *