`Dev.D”, `Black Friday’, `Gangs of Wasseypur’ படங்கள் மூலம் பாலிவுட்டில் இயக்குநராகப் பிரபலம் ஆனவர் அனுராக் காஷ்யப்.
சமீபத்தில் இவர் நடித்திருந்த ‘மகாராஜா’, ‘Rifle Club’ படங்களிலும் கவனம் ஈர்த்திருந்தார்.
அரசியல் குறித்தும் சினிமா உலகம் குறித்தும் வெளிப்படையாகத் தன் கருத்துகளைத் தெரிவித்து வருபவர்.
தற்போது தமிழ்ப் பாடல்கள் யாவும் ஆங்கிலத்தில் மாறிவிட்டதாகவும், அர்த்தமற்றதாக மாறிவிட்டதாகவும் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார்.

இது குறித்துப் பேசியிருக்கும் அனுராக், “தமிழ் சினிமாவும், தெலுங்கு சினிமாவும் ‘PAN-India’ திரைப்படங்களுடன் போட்டியிட ஆரம்பித்துவிட்டன.