“எட்டுத் தோட்டாக்கள்’ ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘3BHK’.
சென்னை போன்றதொரு பெரு நகரில் சொந்த வீடு வாங்கப் போராடும் நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கைக் கதைதான் இந்தத் திரைப்படம். அம்ரித் ராம்நாத் இசையமைத்திருக்கிறார்.
இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசியிருக்கும் இயக்குநர் ராம், “எனக்கு, சித்தார்த், தயாரிப்பாளர் அருண் விஷ்வா மூன்று பேருக்கும் ஜூலை 4ம் தேதி முக்கியமான நாள். என்னுடைய ‘பறந்து போ’, ஶ்ரீ கணேஷ் இயக்கியிருக்கும் ‘3BHK’ இரண்டு படமும் படம் ஜூலை 4ம் தேதி ஒரே நாளில் வெளியாகிறது.