இன்று இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த முன்னோட்ட டீசரின் மூலம் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களின் விவரங்களையும், அவர்கள் நடிக்கும் கதாபாத்திரங்களையும் உறுதிசெய்திருக்கிறார்கள்.

நடிகர் ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், நடிகர் யஷ் ராவணன் கதாபாத்திரத்திலும், நடிகை சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும், நடிகர் ரவி தூபே லட்சுமணன் கதாபாத்திரத்திலும், சன்னி தியோல் ஹனுமான் கதாபாத்திரத்திலும் நடிக்கக் கமிட்டாகியிருக்கிறார்கள்.
படத்தின் திரைக்கதைப் பணிகளைத் திரைக்கதையாசிரியர் ஶ்ரீதர் ராகவன் மேற்கொண்டிருக்கிறார். 8 ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கும் ‘DNEG’ என்ற கிராபிக்ஸ் நிறுவனமே இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளைக் கவனித்து வருகிறது.