Titanic: 'ஏன் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேங்குறீங்க!; ப்ளீஸ்.." - தயாரிப்பாளரை கோரும் கலையரசன்!

Titanic: 'ஏன் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேங்குறீங்க!; ப்ளீஸ்.." – தயாரிப்பாளரை கோரும் கலையரசன்!


அறிமுக இயக்குநர் ஜானகிராமன் இயக்கத்தில், தயாரிப்பாளர் சி.வி. குமார் தயாரிப்பில், 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் ‘டைட்டானிக்’.

ஜானகிராமன், இயக்குநர் சுதா கொங்கராவுடன் ‘இறுதிச் சுற்று’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் கலையரசன், ஆனந்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Titanic Movie
Titanic Movie

முடிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு விகடனுக்கு அளித்த பேட்டியில், அத்திரைப்படம் அந்த ஆண்டே வெளியாகும் என தயாரிப்பாளர் சி.வி. குமார் கூறியிருந்தார். ஆனால், கடந்த ஆண்டு அது வெளியாகவில்லை.

தற்போது, படத்தை வெளியிடக் கோரி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் கலையரசன் பதிவிட்டிருக்கிறார்.அந்தப் பதிவில் அவர், “சி.வி. குமார் சார், ‘டைட்டானிக்’ படத்தை ஏன் வெளியிடாமல் இருக்கிறீர்கள்?

படத்தின் இயக்குநர் ஜானகிராமன், படத்தில் நடித்த நடிகர்கள், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் படத்திற்கு கடின உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்கள்.

அவர்கள் ஒரு நல்ல வெளியீட்டிற்கு தகுதியானவர்கள். இது மிக நல்ல திரைப்படம். எங்களை நம்புங்கள், ‘டைட்டானிக்’ ஒரு வெற்றித் திரைப்படமாக அமையும்.

படத்தை உடனடியாக வெளியிடுங்கள் சார், தயவுசெய்து!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.





Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *