திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கும் கங்கனா ரனாவத் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யாகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அரசியல் வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “எனது அரசியல் வாழ்க்கையை நான் என்ஜாய் செய்கிறேன் என்று சொல்லமுடியாது. இது மிகவும் வித்தியாசமான ஒரு சமூக சேவை.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கூட பார்த்தது இல்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. நான் பெண்களின் உரிமைக்காக போராடியிருக்கிறேன்.
ஆனால் அது வேறு. ஒருவர் பாதாள சாக்கடை பிரச்னையெல்லாம் என்னிடம் வந்து கூறுகிறார். நான் ஒரு எம்.பி., ஆனால் பஞ்சாயத்து அளவிலான பிரச்னைகளையெல்லாம் என்னிடம் கூறுகிறார்கள்.