சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டுள்ளது.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘பராசக்தி’. இதன் படப்பிடிப்புக்கு இடையே தான் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில் ஏற்பட்ட சிக்கலால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இதனை முன்வைத்து பல்வேறு தகவல்களும் வெளிவரத் தொடங்கின.
தற்போது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து நடிகர்களிடமும் தேதிகள் வாங்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இன்று தொடங்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சிவகார்த்திகேயன் சென்றிருக்கிறார்.
சுதா கொங்காரா இயக்கி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளது.