பாலஸ்தீனம் மீது இரண்டாண்டுகளாக இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை `இனப்படுகொலை” எனக் குறிப்பிடும் இந்தப் போரில் இதுவரை 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இதில் குழந்தைகள் மட்டும் 19,000-க்கும் மேல் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
மருத்துவமனைகள், பள்ளிகள் என மக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் கட்டிடங்களை இஸ்ரேல் படையினர் குறிவைத்துத் தாக்குகின்றனர்.
உலகின் பல முனைகளிலிருந்து காஸாவுக்கு நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டாலும் இஸ்ரேல் படையினரால் அது காஸா எல்லையிலேயே தடுக்கப்படுகிறது.
இதனால் காஸா முழுவதும் பட்டினியால் வாடுகிறது. ஐ.நா காஸாவை பஞ்சப் பகுதியாக அறிவித்திருக்கிறது.
இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலை நிறுத்துமாறு ஐநா சபையில் எத்தனை வாக்களித்தாலும், இஸ்ரேலின் கரங்களில் தனது ஆயுதங்களால் போரை நீட்டித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி போர் நிறுத்தத் தீர்மானத்தைத் தொடர்ச்சியாகத் தோற்கடித்து வருகிறது.