மதுரை என்றாலே சாப்பாடுதான்! மதுரையில் ஷூட் செய்த சமயத்தில் டயட்டை சீட் செய்துவிட்டு சாப்பிட்டீர்களா?” என்ற கேள்விக்கு பதில் தந்த அருண் விஜய், அதெல்லாம் இருந்தது!
தனுஷ் பிரதர் ரோட்டுக் கடையில் சாப்பிடலாம் என ஷூட் முடித்துவிட்டு செல்லும்போது அவருடைய வண்டியை நிறுத்திவிடுவார்.
பிறகு நாங்களும் அங்கு வண்டியை நிறுத்திவிட்டு சாப்பிடுவோம். பரோட்டா – சால்னா என சாப்பிட்டுக் கொண்டேதான் இருந்தோம்.
அங்கு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஜிம் இல்லை. அதனால் நாங்கள் இங்கிருந்து உபகரணங்களைக் கொண்டு சென்று, அங்கு ஒரு பயிற்சியாளரையும் வைத்து வொர்க் அவுட் செய்தோம்.
7 மணிக்கு ஷூட்டிங் தொடங்குவதாக இருந்தால், காலை 4 மணிக்கே எழுந்து ஜிம்மில் வொர்க் அவுட் செய்வோம்.