தனக்கு ரூ.15 கோடி சம்பளம் என்று பரவிய தகவலுக்கு மமிதா பைஜு விளக்கமளித்துள்ளார்.
பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருகிறார் மமிதா பைஜு. தற்போது பிரதீப் ரங்கநாதனுடன் இவர் நடித்துள்ள ‘டியூட்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்ததாக விஜய்யுடன் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ வெளியாகவுள்ளது.
இதனிடையே, படங்கள் தொடர் வெற்றி பெறுவதால் மமிதா பைஜு ரூ.15 கோடி சம்பளம் கேட்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மமிதா பைஜு. இந்த விவகாரம் தொடர்பாக, “சமூக ஊடகங்களில் நான் ரூ.15 கோடி சம்பளம் பெறுவதாக செய்திகள் பரவி வருகின்றன. நான் சமூக ஊடகங்களில் இல்லை. ஆனால், அந்தச் செய்திகளைப் பார்த்து உண்மையில் ஆச்சரியமடைந்தேன்.
சிலர் அதன் உண்மைத் தன்மையை அறியாமல், நம்புகிறார்கள். ரூ.15 கோடி சம்பளம் பெருமளவுக்கு பெரியவராகிவிட்டாரா என்று சிலர் அதற்கு கருத்து தெரிவித்திருந்தார்கள். சமூக ஊடகங்களில் பார்க்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மையில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார் மமிதா பைஜு.

