கிஷோர், சார்லி, சாருகேஷ், வினோத் கிஷன், ஷாலி நிவேகாஸ் ஆகியோர் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் சிவநேசன் இயக்குகிறார்.
‘காளிதாஸ்’ (2019) படத்தை தயாரித்த இன்கிரடிபிள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார்.
‘‘எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையாக கொண்ட இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் திரைக்கதைதான் ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது’’ என்று இயக்குநர் தெரிவித்தார். இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

